×

உ.வே.சா 170வது பிறந்த நாள் ‘தமிழ்த்தாத்தா’ தமிழ் தொண்டை போற்றி வணங்குகிறேன்: முதல்வர் வாழ்த்து

சென்னை: உ.வே.சா 170வது பிறந்த நாளை முன்னிட்டு, ‘தமிழ்த்தாத்தா’ தமிழ்த் தொண்டை போற்றி வணங்குகிறேன் என்று முதல்வர் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: அழியக் கிடந்த பழந்தமிழ் இலக்கியங்களை எல்லாம் அச்சிலேற்றி, அழகிய நடையில் அவற்றுக்கு உரையும் எழுதி, தமிழுக்குத் தாம் தந்த பங்களிப்பினால் ‘தமிழ்த்தாத்தா’ என்று நிலைத்துவிட்ட நீடுபுகழ் உ.வே.சாவின் பிறந்த நாளில் அவரது தமிழ்த்தொண்டைப் போற்றி வணங்குகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

The post உ.வே.சா 170வது பிறந்த நாள் ‘தமிழ்த்தாத்தா’ தமிழ் தொண்டை போற்றி வணங்குகிறேன்: முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Uvecha ,Tamildadha ,Chief Minister ,Chennai ,U.V.S. ,Datta ,Thonda ,Tamil Nadu ,M.K.Stalin ,
× RELATED ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர்...